000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அர்த்தநாரீஸ்வரர் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அம்மையப்பராய் விளங்கும் மாதொரு பாகர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தாராசுரத்திலுள்ள அர்த்தநாரீசுவரர் சிற்பம் தனித்துவம் வாய்ந்ததாகும். எட்டுத்திருக்கைகளுடனும், மூன்று முகங்களுடனும் மாதொரு பாகர் காட்டப்பட்டுள்ளார். மகர பூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் அழகு செய்யும் தலைக்கோலத்தின் பின்னால் ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது. நெற்றியில் முத்துத் தாமங்களுடன் கூடிய நெற்றிப் பட்டை அணி செய்ய, முக்கண்ணுடன், புன்னகைத்த முகமாய் உமையொரு பாகர் விளங்குகிறார். நீள் செவிகளில் இடதில் மகர குண்டலமும், வலதில் வியாழ குண்டலமும் விளங்குகின்றன. மார்பில் கண்டிகை, சவடி, சரப்பளி அணிகள் துலங்க, மார்பில் முப்புரி நூலும்,ஸ்தன சூத்திரமும் விளங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. கைகளில் தோள்மாலை, பூரிமத்துடன் கூடிய கேயூரம், முன் வளை (செம்பொற் வளை) ஆகியனவும் இடையில் மகர முகப்புடன் கூடிய இடைவார்ப் பட்டிகையும், தாரகைச் சும்மையுடன் கூடிய தொடையில் தொங்கும் முத்தாலான குறங்குச் செறியும் விளங்குகின்றன. வலது பாகத்தில் தொடை வரையிலான அரையாடையும், இடது பாகத்தில் அம்மைக்குரிய மடிப்புகளுடன் கூடிய நீண்ட பட்டாடையும் இருபுறமும் முடிச்சுகளுடன் கணுக்கால் வரை நீண்டு தொங்குகின்றன. சம பாதத்தில் நிற்கும் அர்த்தநாரி பாதங்களில் சதங்கை அணிந்துள்ளார். எட்டுத் திருக்கைகளில் வலதில் மலர், அக்கமாலை, கத்தி, மழு ஆகியனவற்றையும், இடது பாகத்தில் உள்ள கைகளில் கலன், பாசம், நாகம், கோல் ஆகியனவற்றையும் கொண்டு விளங்குகிறார். இச்சிற்பம் மிகவும் எழிலுடனும், நுணுக்கத்துடனும் வடிக்கப்பட்டுள்ளது. |
653 | : | _ _ |a அர்த்தநாரீசுவரர், அம்மையப்பர், மாதொரு பாகர், உமையொரு பாகர், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000352 |
barcode | : | TVA_SCL_000352 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |